• Jul 26 2025

ஒஸ்தி நாயகி ரிச்சா.. திருமணமாகி ஒரு குழந்தையுடன்.. இப்போ எங்கே, எப்படி இருக்கார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரிச்சா, தமிழில் 'மயக்கம் என்ன, ஒஸ்தி' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதிலும் குறிப்பாக மயக்கம் என்ன படத்தில் இவர் நடித்த யாமினி பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.


இதனையடுத்து ஒரு சில தமிழ் படங்களிலும், நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்திருந்த ரிச்சா 2017ஆம் ஆண்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். மேலும் அப்பல்கலைக்கழகத்தில் அவருடன் சேர்ந்து படித்த ஜோ லங்கேலா என்பவர் மீது காதல் வயப்பட்டார். 


இதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகை ரிச்சா. இவ்வாறு சில நாட்கள் சினிமா பயணங்களிலும் காதல் வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ரிச்சா. மேலும் ரிச்சா சினிமா துறையை தவிர வேறு தொழில் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.


இதனைத் தொடர்ந்து தனது காதலர் ஜோ லங்கேலாவை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் முதலில் ரிச்சாவின் குடும்ப வழக்கப்படியும் பின்னர் ஜோவின் குடும்ப வழக்கப்படியும் பிரமாண்டமாக நடைப்பெற்றது


பின்னர் இத்தம்பதியினருக்கு 2021 ஆம் ஆண்டு ரிச்சாவிற்கு லூகா என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவர் தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் உள்ள போர்ட்லாந்து நகரில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் இன்றைய தினம் நடிகை ரிச்சா தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனையடுத்து அவரது குடும்ப புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement