• Jul 26 2025

கோபிக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்...சூடு பிடிக்குமா பாக்கியலட்சுமி தொடர்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .இந்த சீரியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது கோபியின் கதாபாத்திரம் தான். நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா.. என பல சமயங்களில் கோபி ரசிகர்களை யோசிக்க வைத்து விடுவார்.

 அப்பாவித்தனமான முகத்தை வச்சிக்கிட்டு பண்றது எல்லாம் வில்லங்கமான விஷயங்களை தான். பயந்த புள்ள மாதிரியே நடிச்சு எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை ஸ்கோர் செய்து விடுவார். ஏற்கனவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சில தகவலைகள் வெளியான போது, அதற்கு கோபி மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வெளியிட்டுள்ள தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளதாவது,  இன்னும் பத்து பதினைந்து எபிசோடில்.. 'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சதீஷ் ஆகிய நான். கோபியா நடிச்சுக்கிட்டு இருக்கிற இந்த கேரக்டரை விட்டு நான் விலக காரணங்கள் பல இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் பர்சனல் காரணம். இந்த கோபி கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி


 நானும் யாருக்கும், எந்த கஷ்டமும் கொடுக்காமல், எல்லோரும் பாராட்டும்படி என்னால் முடிந்தவரை சுமாராக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும், என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். இவருடைய பதிவு, இந்த சீரியல் ரசிகர்கள் மற்றும் சதீஷின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இந்நிலையில் கோபிக்கு பதிலாக நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இவருக்கு பதில் பலர் நடிப்பதற்கு ஓடிசன் நடந்து வரும் நிலையில் இவருக்கு பதில் பிரபல நடிகர் அப்பாஸ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


Advertisement

Advertisement