• Jul 25 2025

ப்ளீஸ் இதில பேசுங்க.. மேடையில் மனைவிக்கு அன்புக் கட்டளையிட்ட இசைப்புயல்... இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2009இல் ஆஸ்கர் விருது வென்றதும், விழா மேடையில் இசைப்புயல் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது நம் அனைவருக்கும் இன்றுவரை நினைவிருக்கின்றது. அந்தளவிற்கு இவர் தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவர். இதனை பல தடவைகளில் செயலின் மூலமாக வெளிப்படுத்தியும் இருக்கின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிரா பானுவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. 

இதனையடுத்து தொகுப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானின் மனைவியையும் மேடைக்கு அழைத்து அவரையும் ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கூறினர். பின்னர் மேடையேறிய சாயிரா பானு மைக்கை எடுத்ததும் "இந்தில பேசாதீங்க; தயவுசெஞ்சு தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்" என மேடையில் வைத்து தன் மனைவிக்கு அன்புக்கட்டளை இட்டார் ரகுமான்.


இதை அவர் மைக்கில் சொன்னதைக் கேட்டு அங்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் சிரித்தனர். இதையடுத்து பேசத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு "தன்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி ஆங்கிலத்தில் பேசினார். தனது கணவருக்கு விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், அவரின் குரல் தான் தனக்கு மிகவும் பிடித்தது, அவரின் குரல் மீது எனக்கு காதல் உண்டு" என்றும் இங்கிலீஷில் பேசினார்.

இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement