• Jul 23 2025

பிரியாணி விருந்துக்கு பின் விஜய் கன்னத்தில் அறைந்த ரசிகர்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நேற்று அவரது ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேசியுள்ள விடயம் இணையத்தளத்திலும் சரி மீடியாக்களிலும் சரி வைரலாகி வருகின்றது. கொரோனா காரணமாக கடந்த சில வருடங்களாக சந்திப்பு நடைபெறாத நிலையில் தற்போது விஜய் சந்திப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று கலந்துகொண்டனர்.

 அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த விஜய், அதன் பின் அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.

பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துவிட்டு நடிகர் விஜய் தனது காரில் வீடு திரும்பும் பொழுது அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் பெரும் அளவில் காரின் அருகே திரண்டனர்.

மேலும் இதில் சிலர் காரின் கண்ணாடிக்குள் கைவிட்டு விஜய்க்கு கைகொடுத்தனர். அதில் ஒருவர் விஜய்யின் கன்னத்தை தொடுவதுபோல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதை கவனித்த நெட்டிசன்கள் ரசிகர் ஒருவர் விஜய்யின் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement