• Jul 24 2025

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இவ்வளவு பெரிய மகளா..அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முண்ணனி நடிகராக திகழ்பவர் நடிகர் அல்லு அர்ஜுன்.இவர்  நடிகராக மட்டுமல்லாது  நடனக் கலைஞர் மற்றும் இயக்குநராகவும் பணி புரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அத்தோடு   இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். 

 இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.  இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான திரைக்கதை களம் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார்.

 சுகுமார் இயக்கி அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா திரைப்படம் மா பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கெமிட்டாகும் இவர் தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி மகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு...



Advertisement

Advertisement