• Jul 24 2025

துணிவு படக் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழப்பு- அதிரடியாக வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் துணிவு.எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட பல பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களையுமு் பெற்று வருகின்றது. இதனால் இப்படம் எதிர்வரும் நாட்களில் வசூலில் தெறிக்க விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில் சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது கீழே விழுந்து தான் உயிரிழந்துள்ளார்.

முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்ததாக கூறப்படுகின்றதைக் காணலாம்.


Advertisement

Advertisement