• Jul 25 2025

பத்தாயிரம் தீக்குச்சிகளால் விஜய்யின் ரசிகர் ஒருவர் செய்த சாதனை- வேற லெவல் செயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வாரிசு என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நாளை காலை வெளியாக உள்ளது. இதற்காக ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வர, மறுபுறம் அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் செய்துள்ள விளம்பரம் தான் தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது.அதாவது மதுரையை சிராஜுதீன் என்பவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவர் பத்தாயிரம் தீக்குச்சிகளால் விஜய்யின்  உருவப்படத்தை வரைந்து அந்த தீக்குச்சிகளில் தீப்பற்ற வைத்து தீயில் நடிகர் விஜயின் முகம் தெரிகிற வகையில் உருவாக்கி அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.


வாரிசு படத்தில் தீ தளபதி என்கிற பாடல் ஒன்று இடம்பெற்று இருக்கும் அதற்கு ஏற்றார் போல் தீயிலேயே தளபதியின் முகத்தை வரவைத்து மாஸ் காட்டி உள்ள சிராஜுதீனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் விஜய்யே பெருமிதம் கொள்ளும் வகையில் அவரது செயல் இருந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் 6 மணி நேரம் செலவிட்டு இதனை செய்து சாதனை படைத்துள்ளார் சிராஜுதீன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அத்தோடு இத்திரைப்படமானது நாளை முதல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்ப உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement