• Jul 24 2025

செல்லம்மா தான் இந்த வீட்டின் வாரிசு என அறிந்து கொண்ட மேகா- எதிர்பாராத திருப்பங்களுடன் செல்லம்மா சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் செல்லம்மா. இந்த சீரியலில் சித்துவுக்கும் மேகாவுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.

 ஆனால் மேகாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவரது கணவர் இறந்து விட்டார் என்ற செய்தியும் மேகாவுக்கு குழந்தை இருப்பதும் தெரிந்ததால் சித்து மேகாவைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அத்தோடு மேகாவின் முதலாளி பதவியையும் மகேந்திரன் பறித்து விட்டார்.

இதனால் மேகா தன்னுடைய வளப்பு அப்பாவான மகேந்திரன் சி.ஓ பதவியிலிருந்து தன்னை நீக்கி விட்டதாக கோயிலில் வைத்து தன்னுடைய சொந்த அப்பாவிடம் கூறுகின்றார்.இந்த சமயத்தில் சித்து மீண்டும் பதவியேற்றதால் மகேந்திரன் சித்து கோயிலிருக்கு வரும் சமயத்தில் செல்லம்மாவைக் கண்டு கூறுகின்றனர்.

இவ்வாறு பேசிட்டு இருக்கும் போது மேகாவின் தந்தை செல்லம்மா தான் மகேந்திரனின் சொந்த மகள் என்பதனை கூறி விடுகின்றார். இதனைக் கேட்ட செல்லம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதையும் காணலாம்.


Advertisement

Advertisement