• Jul 24 2025

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது திடீரென போடப்பட்ட மோசடி வழக்கு- பதிவு செய்தது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். 

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், அண்மையில்  திடீரென சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார். நடிகை மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர் அனில் குமார் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.


 இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பின் சீரியல் நடிகருடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்து வந்தன.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.

திருமணத்திற்குப் பின்னர் இவர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தமது புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் ரவீந்தர் பிறந்தநாள் கொண்டாடியிருந்தார். இவரின் பிறந்தநாள் புகைப்படங்கள் கூட வெளியதகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரவீந்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சென்னை மத்திய குற்றப் பிரவு போலீசார் மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement