• Jul 24 2025

'குஷி' படத்தில் இருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ-

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா, விஜய் தேர்கொண்டாவுகக ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தான் குஷி. இப்படத்தினை இயக்குந் ஷஜவா நிர்வாணா இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு உள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்க அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில், விஜய் தேவர் கொண்டா நடித்துள்ளார்.


 குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரோஜா நீதான் எனத் தொடங்கும் ரொமாண்டிக் பாடல் விஜய் தேவரைகோண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்த பாடல், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆராத்யா என்கிற இரண்டாவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.




Advertisement

Advertisement