• Jul 25 2025

ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு முன்னேறுவது பிடிக்கல - ஆயிஷாவின் முன்னாள் காதலனுக்கு பதிலடி கொடுத்த விஷ்ணு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போடியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு அணியினர் அந்த டிவி என்றும் மற்றொரு அணியினர் இந்த டிவி என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் இந்த போட்டியில் 21 பேர் பங்குபற்றி வந்த நிலையில் இதுவரை 3 பேர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்தோடு மீதமாக தற்பொழுது 18 பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டிருக்கும் முக்கிய போட்டியாளர் தான் ஆயிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


சத்யா சீரியல் மூலம் பிரபல்யமான இவர் இந்த வீட்டின் டஃப் கன்டெஸ்டன்டாகவே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார். இருப்பினும் அவருடைய நடவடிக்கை காரணமாக நெக்கட்டிவ் விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகின்றார். அத்தோடு இந்த வாரம் வீட்டை விட்டு இவர் வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கு என்று ரசிகர்கள் கூறியும் வருகின்றனர்.

மேலும் இவர் பிக்பாஸ்ல தன்னைப் பற்றி கூறியதாக அவருடைய முன்னாள் காதலனான தேவ் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.அதில் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்த விட்டது என்றும் தெரிவித்தார்.அத்தோடு தங்களது பிரிவிற்கு சத்யா சீரியல் விஷ்ணு தான் காரணம் ஆயிஷா இப்போது வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார். அத்தோடு ஆயிஷா மோசமானவர் என்பதைப் போல சித்தரித்துள்ளார்.


இதன் பின்னர் விஷ்ணு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு பொண்ணு தானே கஷ்டப்பட்டு முன்னுக்கு வாறது சில பேருக்கு பிடிக்கல அவளை எப்படியாவது அசிங்கப்படுத்தனும் என்றதுக்காகத் தான் இந்த வேலையைப் பண்ணிட்டு இருக்கிறாங்க என விஷ்ணு பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement