• Jul 24 2025

நட்சத்திரக் ஹோட்டலில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்... முக்கிய சினிமாப் பிரபலம் உயிரிழப்பு... தீவிர விசாரணையில் போலீஸ்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் செல்வா என்ற செல்வராஜ் திமுக நிர்வாகி மட்டுமல்லாது சினிமா படங்களை இயக்கியுள்ளார். அத்தோடு பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் வென்றுள்ளார். செல்வராஜ் நேற்றைய தினம் தன்னுடைய திருமண நாள் மற்றும் பிறந்த நாளை பெரம்பலூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார். 

அந்த சமயத்தில் முகமூடி அணிந்த படி பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறாக பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement