• Aug 25 2025

நமக்குள்ள சண்டை வாறதுக்கு இது மட்டும் தான் காரணம் மஹா ரொம்ப கோபப்படுவா- ரவீந்தர் சொன்ன ரகசியத் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தொடங்கி பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. அவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திடீர் திருமணம் பலருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

குண்டாக இருக்கும் ரவீந்தரை அழகாக இருக்கும் மகாலட்சுமி எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பது தான் அனைவரும் எழுப்பிய கேள்வியாக இருந்தது.இருப்பினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.


மேலும் சமீபத்தில் ரவீந்தர் தனியாக இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட, அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என விளக்கம் கொடுத்தனர்.இந்நிலையில் ரவீந்தர் ஒரு சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மகா உடன் வரும் சண்டை பற்றி பேசி இருக்கிறார்.


'மஹா ரொம்ப பொஸசிவ். நான் அவளது பிரெண்ட்ஸ் யாருடன் பேசினால் கூட கோபப்படுவார். இந்த ஒரு விஷயத்தால் மட்டும் தான் சண்டை. மற்ற சண்டைகள் அப்படி வந்து இப்படி போய்டும்' என ரவீந்தர் கூறி இருக்கிறார். அத்தோடு திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தமது கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement