• Jul 24 2025

சில்க் ஸ்மிதாவை காதலித்து கழட்டி விட்டு... இன்னொரு பெண்ணுடன் சென்ற பிரபலம்... வெளியான நீண்ட நாள் உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

80களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் திடீரென இறந்தது இன்றும் மர்மமாகவே இருக்கின்றது.இவர் உச்ச நடிகையாக இருந்த போது  ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் நட்பாக இருந்த பலரும் கூறுவார்கள். அதே நேரத்தில் பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்த வேலு பிரபாகரனிடம் சில்க் ஸ்மிதா நெருக்கமாக பழகியுள்ளார்.


 இது குறித்து வேலு பிரபாகரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "நானும், சில்க் ஸ்மிதாவும் காதலிச்சிருக்கோம், அந்த சமயத்தில் அவங்க ராதாகிருஷ்ணன் என்ற டாக்டருடன் வியூ பண்ணிட்டு இருந்தாங்க, இதற்கு முன்னாடி நான் ஜெய்தேவி என்ற ஒரு பெண் தயாரிப்பாளருக்கு அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதாக சத்தியம் பண்ணி இருந்தேன், 

சில்க் ஸ்மிதாவை சந்திக்க முதலே நான் அந்தப் பெண்ணுடன் உறவில் இருக்கிறேன், அதை மறைச்சு சில்க் ஸ்மிதாவுடன் பழகினேன், ஒருதடவை ஜெய்தேவி என்னைத் தேடி சில்க் வீட்டிற்கே வந்திடுறாங்க, அந்த சமயத்தில் நாங்க 2பேரும் சாப்பிட்டு இருந்தோம்" என்றார்.


மேலும் "இதுவரைக்கும் நடந்தது நடந்து போய்ட்டு நீங்க இனி யார் கூட இருக்கப்போறீங்க என்று அவங்க கேட்டாங்க, உடனே நான் முதல் காதலி ஜெய்தேவியுடன் போறது தான் சரி எண்டிற்று அப்பிடியே அவங்க கூடவே போய்ட்டன்" எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது "நான் அந்த சமயத்தில் எடுத்த முடிவு தப்பு என்று தான் நினைக்கிறேன், ஏனெனில் நான் அவங்க கூட இருந்திருந்தால் ஒருவேளை அவங்க இறக்காமல் இருந்திருக்கலாம், சில்க் ஸ்மிதா ஒரு அற்புதமான பெண், எனக்காக போன் இல்லாத சமயத்தில் நிறைய நேரம் காத்திட்டு இருந்திருக்கா, எனக்கும் சில்க் ஸ்மிதாவிற்கும் இருந்தது காதல் தான், நான் அவளை ஏமாற்றிவிட்டு ஜெய்தேவியுடன் சென்றது பின்னர் எனக்கு ஒரு குற்ற உணர்வாக இருந்தது" எனவும் வேலுபிரபாகரன் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement