• Jul 23 2025

என் சொத்தே அவர் தான்- விஜய்யின் தீவிர ரசிகன்- ரசிகர்களை அசர வைத்த சிறுவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் விருப்பம் ஆகும். ரசிகர்களுக்காகவே தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அரசியலுக்கு வர முடிவு செய்திருக்கிறார். 

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஜூலை 11ம் தேதி சந்தித்து பேசினார் .பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வந்தவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. நிர்வாகிகளை சந்தித்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் விஜய். 


அவரின் ஹேர்ஸ்டைல், கெட்டப்பை பார்த்த ரசிகர்களுக்கு வின்டேஜ் விஜய் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டார்கள்.பனையூரில் நடந்த கூட்டத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த விடயமே. அந்த வகையில் தற்பொழுது ஒரு சிறுவன் பேட்டியளித்துள்ளர்.அதில் பத்திரிகையாளர் எனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்ட போது விஜய்யைத் தான் பிடிக்கும். என் சொத்தே அவர் தான் என்று சொல்லியிருக்கிறான்.


மேலும் அம்மா அப்பாவா பிடிக்கும் என்று கேட்டதற்கு எனக்கு அவரைத் தான் பிடிக்கும் அவருடைய படத்தில் லியோ படம் தான் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement