• Jul 26 2025

நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது- குட் நியூஸ் சொன்ன நடிகை ப்ரியா பவானி ஷங்கர்- காதலனுடன் வெளியிட்ட ரொமான்டிக் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.இவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புக் கிடைத்து வருவதால் தனுஷ், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிறு கதாபாத்திரம் என்றாலும் அழுத்தமான ரோலை தேர்வு செய்து நடிக்கும் ப்ரியா பவானி ஷங்கர், தற்போது மகிழ்ச்சிகரமான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர, பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


அதாவது இவர் தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான். இதனை அவரே பலமுறை தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

அதாவது தன்னுடைய 18 வயதில் இருந்தே கடற்கரையை பார்த்து ரசித்தபடி ஒரு இடத்தை வாங்க நினைத்தோம். தங்களின் மாலை பொழுது கடலில் இருந்து எழும் சந்திரனை பார்த்தபடி இருக்க வேண்டும், எனவே அந்த ஆசை நிறைவேறும் விதமாக, கடற்கரையை ஒட்டி ஒரு வீட்டை வாங்கியுள்ளதாக ப்ரியா பவானி ஷங்கர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதில் தன்னுடைய காதலனுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement