• Jul 24 2025

வாரிசா? துணிவா? எந்தப் படத்தை பார்ப்பீங்க- நான் முதலில் இந்த படத்தைத் தான் பார்ப்பேன்- ஓபனாகப் பேசிய நடிகர் ஜுவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வரலாறு முக்கியம்.இப்படத்தில் கதாநாயகனாக ஜுவா நடித்து வருகின்றார்.கதாநாயகியாக காஷ்மீரா பர்தேஷி  என்பவர் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனால் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜுவாவிடம் பொங்கலுக்கு வாரிசா? துணிவா? - இதில் எந்த படத்தை முதலில் பார்ப்பிங்க" என்று கேட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த ஜுவா "முதலில் எந்த படத்துக்கு டிக்கெட் கிடக்கிதோ அந்த படத்துக்கு போவேன்" என்று பதில் அளித்தார்.அப்போதும் விடாத செய்தியாளர்கள். "ஒரே நேரத்தில் இரண்டு படத்துக்கும் டிக்கெட் கிடைத்துவிட்டது. அப்போது என்ன செய்விர்கள்" என கேட்க, "நீங்க எதை பாப்பீங்க" என நிருபரை திருப்பி கேட்க, அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.

"விஜய், அஜித் இரண்டு பேருமே பெரிய நடிகர்கள் அவர்களை பார்த்து தான் வளர்ந்து வருகிறோம், அதனால் அவர்களின் இரண்டு படத்தையும் பார்ப்பேன்" என்று கூறி சமாளித்துள்ளார். 


மேலும் இவரின் வரலாறு முக்கியம் திரைப்படத்தில்  வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement