• Jul 23 2025

ராமராஜன் கொடுத்த காதல் கடிதம் ..பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி...! அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின்பு நடிகர் ராமராஜனைக் காதலித்து திருமணம் செய்த இவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்தார்.

 இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நளினி பேட்டி அளித்துள்ளார். அதில்,வாழை அடி வாழை ஷூட்டிங்கை உறவினர்களுடன் பார்க்க வந்தேன். அப்போது படப்பிடிப்பை பார்த்து வியந்து போனேன். நான் சினிமாவில் நடிப்பதில் அப்பாவிற்கு விருப்பம் இல்லை.ஆனால், அம்மா டான்ஸ் டீச்சர் என்பதால், நான் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 

தொடர்ந்து பேசிய நளினி, ராமராஜன் என்னை காதலிப்பது எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும், என்னுடன் அவர் பேசியதை எனது உதவியாளர் பார்த்துவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டார். அதனால் அவரை எனது உறவினர்கள் அடித்தார்கள். எனக்காக அடியெல்லாம் வாங்கியதால் அவர் மீது இன்னும் காதல் அதிகரித்தது.

என் மேக்கப் மேனிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து லவ் லெட்டரை ராமராஜன் கொடுத்து அனுப்புவார். அதை நான் ரகசியமாக எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு கொண்டு சென்று படிப்பேன். இன்னும் அந்த கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன். 

திருமணமானதும்,எங்கு செல்வது என்று தெரியாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருந்தோம். அப்போது தான் எம்.ஜி.ஆர் எங்கள் திருமணத்தில் தலையிட்டு பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தார்.13 வருட திருமணம் வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஜாதகத்தின் மீது இருந்த நநம்பிக்கையால்தான் அவர் என்னைவிட்டு பிரிந்தார் என்று நடிகை நளினி தனது காதல் குறித்து மனம் திறந்து பேசினார்.

Advertisement

Advertisement