• Jul 23 2025

மகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும் வனிதா..? வெளிவந்த உண்மை... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகின்ற விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்வும் முடிவுக்கு வந்தது.


இதனை அடுத்து பல சர்ச்சைகளைச் சந்தித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டதன் மூலமே மக்களிடம் மிகவும் பிரபல்யமானார். இதன் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்து இப்போது கலக்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் சிறப்பு வேடம், படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களும் செய்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர் தம்பதிகளிடம் வனிதா பேட்டி எடுக்கும் போது இந்திரஜா திருமணம் குறித்து பேசப்பட்டது. அந்த சமயத்தில் வனிதா சட்டென்று தனது மகள் ஜோவிகாவிற்கு தானே குழந்தை பெற்றுக் கொடுக்கப் போவதாகவும், படப்பிடிப்பிற்கு குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்தால் மட்டும் போதும் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.


அத்தோடு "பெற்றால் தான் குழந்தையா" என்ற கேள்வியையும் எழுப்பி, தனது மனதில் உள்ள விடயத்தை ஓப்பனாக தெரிவித்து இருக்கின்றார் வனிதா. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பட்டென்று பேசும் வனிதா தற்போது தனது மகளுக்காக குழந்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளது தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement