• Jul 25 2025

ஸ்ருதிஹாசனிடம் தாறுமாறான கேள்வி கேட்ட நெட்டிசன்- அந்த பழக்கம் இல்லை குடிக்கவும் மாட்டேன்- ஓபனாக பதில் சொன்ன நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையைப் போல் பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்ருதி, பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவர் தற்பொழுது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.


ஸ்ருதி ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசுபவர். அவரது பர்சனல் விஷயங்களை கூட ஓப்பனாக பேசுவார்.இந்நிலையில் ஸ்ருதி ஹசனுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் இருக்கா என நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த அவர். "எனக்கு அந்த பழக்கம் இல்லை. குடிக்கவும் மாட்டேன். குடி இல்லாத ஒரு வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறேன்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement