• Jul 24 2025

கோபியின் ஆர்மியில் சேர்ந்த பிரபல சீரியல் நடிகைகள்- அடக்கடவுளே பாக்கியா பாவமில்லையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த சீரியல் பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் என்பதும் முக்கியமாகும்.


கணவனால் ஏமாற்றப்பட்டு குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.இதில் சதீஷ் மற்றும் சுசித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.


கோபி பாக்கியாவுக்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் நடக்கப் போவதாக எண்ணி குழம்பிப் போய் இருந்தார்.தற்பொழுது உண்மை தெரிந்ததால் அமைதியாக இருக்கின்றார்.

இந்த வார கதையில் கோபி, பாக்கியா குழம்பை சூப்பராக இருக்கிறது என கூறியதால் பிரச்சனைகள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.தொடரின் கதைக்கே ரசிகர்கள் ஒருபக்கம் இருந்தாலும் அதில் கோபியாக நடிக்கும் சதீஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாராம் உள்ளது. தற்போது அவருக்கான ஆர்மியில் இரண்டு சீரியல் நடிகைகளும் இணைந்துள்ளார்.


அது வேறுயாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் திவ்யா மற்றும் ரித்திகா தான் அவரது ஆர்மியில் இணைந்துள்ளார்கள். ரித்திகா படப்பிடிப்பு தளத்தில் கோபி பக்கத்தில் உட்கார்ந்து நாங்கள் கோபி ஆர்மி என வீடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement