• Jul 23 2025

KGF ராக்கி பாயிடமிருந்து விஜய்க்கு பறந்த போன் கால்...என்னவா இருக்கும்?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் எப்படி மாஸ் இடத்தில் இருக்கிறாரோ அதேபோல் கன்னட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் யாஷ். அதுமட்டுமின்றி KGF படத்தினால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் யாஷ் தன்வசம் இழுத்துள்ளார். அதில் அவரது ராக்கி பாய் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் அதிக வசூலில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படமும், விஜய்யின் பீஸ்ட் படமும் நேர் எதிராக மோதிக்கொண்டது. ஆனால் இதில் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சருக்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கேஜிஎஃப் 2 படம் நல்ல வசூலை பெற்றது.

மேலும் கே ஜி எஃப் 2 படத்தால் தான் பீஸ்ட் படம் தோல்வியுற்றதாக அப்போது விமர்சனம் பேசப்பட்டது. ஆனால் இப்போது விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் வீடியோவை பார்த்துவிட்டு யாஷ் தளபதிக்கு போன் போட்டு பேசி உள்ளார்.

அதாவது தளபதியிடம் லியோ டீசர் கிளாஸாக இருப்பதாக நெகிழ்ச்சியாக யாஷ் பேசி உள்ளாராம். மேலும் இப்போதே இந்த படம் 100 சதவீதம் வெற்றி உறுதி என்பது போல பல விஷயங்களை விஜய்யிடம் பேசியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement