• Jul 24 2025

விஜய் டிவி குழந்தை நட்சத்திரங்களை விலைக்கு வாங்கிய பாரதி கண்ணம்மா சீசன்2 சீரியல்- அவங்க மட்டும் வரலையே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா முதல் சீசனின் முடிவை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நாயகன் பாரதி வீட்டில் சௌந்தர்யாவின் அண்ணியாக வசித்து வருபவர் ஷர்மிளா. சீரியலில் மெயின் வில்லியாக என்ட்ரி கொடுக்க உள்ள வெண்பாவின் அம்மா தான் இவர். நடிகர் முரளி, வடிவேல் நடிப்பில் வெளியாகிய சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தான் ராதா.இந்த படத்துக்குப் பிறகு கேம், அடவாடி, என்ன சிறு படங்களில் நடித்து வந்த இவர் அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் .


மேலும் வெண்பா கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் புதிய பிரபலங்கள் பலர் இணைந்தாலும் கண்ணம்மா சித்ராவிடம் தன்னுடைய சிறுவயதுக்கதையை கூறுவதாகவே இந்த வாரம் முழுவதும் அமைந்திருந்தது.

இதில் விஜய் டிவியின் குழந்தை நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்திருந்தமையையும் காணலாம். குறிப்பாக ராஜா ராணி சீரியல் சர்க்கரை ,கண்ணே கலைமானே தமிழ், பாரதி கண்ணம்மா சீசன் 1 இல் தாமரையில் மகளாக நடித்தவர் ,அத்தோடு இந்த சீரியலில் கேமாவாக வந்தவர், பாக்கியலட்மி மயூ ஆகியோர் இதில் இணைந்து நடித்திருந்தனர்.


இருப்பினும் பாரதிகண்ணம்மா சீசன் 1இல் நடித்த லக்ஷ்மி மாத்திரம் இந்த சீரியலில் இணையவில்லை. இதனால் என்ன இயக்குநரே எல்லோரையும் சேர்த்திட்டு லக்ஷ்மியை மட்டும் மிஸ் பண்ணீட்டிங்களே என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement