• Jul 24 2025

சூர்யா பட நடிகர் மீது போலீஸில் புகார்.. பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பரேஷ் ராவல். இவர் தமிழ் சினிமாவில் சூர்யாவின் 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்துப் பிரபலமானவர். இருப்பினும் இந்தியில் தான் அதிகளவிலான படங்களில் நடித்திருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவைத் தாண்டி பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பரேஷ் ராவல் பிரச்சாரம் செய்தபோது வங்காளிகள் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது. 


இதனைத் தொடர்ந்து பரேஷ் ராவல் மீது மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொல்கத்தா போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகாரில் "பரேஷ் ராவல் பேச்சு வங்காள சமூகத்தினரிடையே கலவரத்தை தூண்டி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 


இதையடுத்து தற்போது பரேஷ் ராவல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement