• Jul 25 2025

தளபதி 67 படத்தில் மோசமான வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர் போட்ட பதிவு- அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 11ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.மேலும் இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதன்படி இப்படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தரமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.இதில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகவும், இசையமைப்பாளர் அனிருத்,வசன கர்த்தாவாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன வேல் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றுவார்கள் என்றும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார் என படத்தின் தொழில்நுட்ப குழுவினரின் பெயரை அறிவித்தது.


இதையடுத்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை விவரங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தனது  டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. இதில், தமிழ் சினிமாவுக்கு சஞ்சய் தத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், தளபதி 67 படத்தின் ஒன் லைன் கதையை கேட்டதுமே நான் மிரண்டுவிட்டேன், இந்த படத்தில், நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன் என சஞ்சய் தத் கூறியுள்ளார்.


நடிகர் சஞ்சய் தத் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற படுமோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளதால், இப்படத்திலும், படுமோசமான வில்லனாகவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement