• Jul 24 2025

திடீரென கையில் டாட்டூ குத்திக் கொண்ட நடிகை சதா- அதுவும் என்ன விஷயத்துக்காக தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமகமாகியவர் தான் சதா. இப்படத்தில் இவர் போய்யா என கையை காட்டி செல்லமாக ஜெயம் ரவியை போக சொல்லும் காட்சி பல பெண்களை அப்படியே அந்த நேரத்தில் செய்யத் தூண்டியது. கவிதையே தெரியுமா பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செம ஹிட் அடித்தது.

இதனால் இவருக்கு படவாய்ப்புக் குவியத் தொடங்கியதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் சதா.


2007ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்திற்கு தமிழில் நடிகை சதாவிற்கு பெரிய படங்கள் அமையவில்லை. புலி வேஷம், எலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்த சதா 2018ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டு தற்போது வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.


நடிகை சதாவிற்கு டாட்டூ என்றாலே ஒரு வித பயமாக இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தனது கையில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். மேலும், அந்த டாட்டூ மற்ற டாட்டூக்கள் மாதிரி எல்லாம் இல்லை என்றும் இது வீகன் டாட்டூ என்றும் புதிய விளக்கத்தையே கொடுத்திருக்கிறார் சதா


டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் அந்த இன்க் மிருகத்தில் இருந்து எடுக்கவில்லை என்பது தான் வீகன் டாட்டூ என சொல்லப்படுகிறது. விலங்கு நல ஆர்வலரான நடிகை சதா வீகனிஸத்தை ஆதரித்தும் புலிகளை பாதுகாக்கும் கருத்தை ஆதரித்தும் தனது கையில் செடி மற்றும் புலியின் பாதம் இருக்கும் டிசைன் டாட்டூவை குத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement