• Jul 25 2025

தனது ஒட்டு மொத்த குடும்பத்துடனும் விஜய்... இதுவரை யாருமே பார்த்திடாத அரிய புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நாயகனாக பல ஆண்டு காலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இன்று முன்னணி ஹீரோவாக இருப்பினும் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தான். 


அதாவது 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் நாயகனாக காலடி எடுத்து வைத்த விஜய் நடிப்பில் இதுவரை சுமார் 60இற்கும் அதிகமான படங்கள் உருவாகி உள்ளன. அந்தவகையில் தற்போது 'தளபதி 67' இல் நடித்து வருகிறார். 

இப்படத்தின் உடைய படப்பிடிப்பிற்காக தற்போது படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் தளபதி 67 படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.


இவ்வாறு விஜய் சினிமாவில் படு பிசியாக இருந்து வந்தாலும் தற்போது தனது தந்தையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். அதாவது விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். இருவரைப் பற்றியும் பல விதமாக சர்ச்சைக்குரிய செய்திகள் மாறி மாறி வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் விஜய் தனது தாய், தந்தையை விட்டு பிரிந்து இருக்க முக்கிய காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், எது உண்மையான தகவல் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.


இந்நிலையில் விஜய் தனது மகள் பிறப்பதற்கு முன்பாக தாய், தந்தை, மனைவி மற்றும் மகன் என ஒட்டு மொத்த குடும்பத்துடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு பழைய புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement