• Jul 25 2025

அம்மா அந்தப் பையனோட தொடர்பில் இருந்தாங்க- யூடியூபர் பிரிகியா வீட்டை விட்டு ஓடியதற்கு இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக யூடியூப் தளங்களில் வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அங்கீகாரத்தைப் பெற்ற பிரபலங்கள் பலர் இருக்கின்றர்.அந்த வகையில்  தனது குடும்பத்துடன் இணைந்து வீடியோக்களைப் போட்டு பிரபல்யமானவர் தான் பிரிகியா.இவர் சில மாதங்களாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றார்.


குறிப்பாக இவருக்கு அண்மையில் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகின்றார்.இதனால் இவருடைய அம்மா பிரிகியா ஏமாற்றி விட்டு ஓடி விட்டதாகவும் தன்னுடைய கணவனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாகவும் பல வீடியோக்களைப் போட்டிருந்தார்.


இந்த நிலையில் இது குறித்து பிரிகியா முதல்முறையாக இன்டர்வியூ கொடுத்துள்ளார். அதில் எங்கம்மா ஆசிரியராக இருக்கின்றார். அவங்களுக்கு சின்ன வயசில இருந்து என்மேல நம்பிக்கை இல்லை. என்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் என்றே இருந்தாங்க. அதனால நாம் 10ம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.


நான் முதல்ல இருந்தே சொல்லிட்டே இருப்பேன் எனக்கு கல்யாணம் வேணாம் நான் படிக்கணும் என்று ஆனால் அவங்க தான் கேட்கல இந்த மாப்பிள்ளை எனக்கு ஓகே பண்ணிட்டாங்க. எனக்கு ஆரம்பத்தில இருந்து இவனை பிடிக்கல எங்க அம்மாவுக்காகத் தான் பொறுத்திட்டு இருந்தேன்.எனக்கு எது வேணும் என்று தோணினாலும் அதை எங்க அம்மா கிட்ட கேட்பேன். அதை எங்க அம்மா அவன் கிட்ட சொல்லி வாங்கித் தருவாங்க. இப்போ அவன் வாங்கித்தந்த பொருள் எல்லாம் அவங்க வீட்டை தான் இருக்கு. நான் எதையுமே கொண்டு வரல.


நான் சோஷியல் மீடியாவில இருக்கிறதால என்னை வச்சு தான் பேமஸ் ஆகணும் என்பது தான் அந்த பையனோட ட்ரீம்.இதற்கு எங்க அம்மா சர்ப்போட். நீ அவனை தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டே இருப்பாங்க. இதற்கு எங்க அண்ணனும் உடந்தை. அந்தப் பையன் என்னை ஒரே தொட்டு கிட்டே இருப்பான்.அவன் பண்ணுறது எதுவுமே பிடிக்காது எனக்காக எங்க அப்பா பேசுவாரு ஆனால் அம்மா அதை எதுவுமே கேட்க மாட்டாங்க என்றார்.


தொடர்ந்து பேசிய பிரிகியாவின் அப்பா என் பொண்ணை ஒரு நாள் சாப்பிட தான் வெளில கூட்டிட்டு வந்தேன்.அதற்கு நான் பொண்ணை எங்கையோ கொண்டு போய்டேன் என்று சொல்லி சண்டை போட்டாங்க அதனால அப்படியே வெளிய வந்துட்டோம். இருந்தாலும் இப்பவே எங்களுக்கு நிறைய கொலை மிரட்டல் வந்துட்டே இருக்கு. அந்த பையன் என் குடும்பத்தை விட்டு போனாலே குடும்பம் நல்லா இருக்கும். என் பொண்டாட்டி அவனை விட்டாலே நல்லா இருக்கும். என் பொண்ணோட படிக்கிற சேர்ட்டிப்பிக்கெட் எல்லாம் அங்க இருக்கு அதை எல்லாம் தந்த உதவினாலே நல்லா இருக்கும் என்றும் அந்த இன்டர்வியூவில் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


 

Advertisement

Advertisement