• Jul 24 2025

தனத்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு- செம சந்தோஷத்தில் இருக்கும் மூர்த்தி குடும்பம்- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்மையில் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது. இதனால் எல்லோருமே சந்தோஷமாக இருந்தனர்.

இதனை அடுத்து தனத்திற்கு மார்புப் புற்று நோய் இருப்பதால் எப்படியாவது சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தால் தான் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம் என டாக்டர் சொன்னதால் முல்லையும் மீனாவும் பிளான் போட்டு தனத்தை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.


இருப்பினும் சிசேரியன் செய்வதற்கு மூர்த்தி சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார். இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தனத்திற்கு சிசேரியன் செய்து பெண்குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் செம குஷியில் இருக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement