• Jul 24 2025

ஆசைக் கணவன் ரவீந்தரின் பிறந்தநாளில் மகாலட்சுமி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்- வாவ் வேற லெவல் கியூட்டா இருக்கே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

'அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆண்டு இவர் தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. 

இவர்களின் திருமண புகைப்படம் வெளியான போது கூட, பலர் இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தனர்.திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.


இது தவிர இருவரும் தமது கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று ரவீந்தர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் ரவீந்தருக்கு மகாலட்சுமி புகைப்படம் ஒன்றினை பரிசாகக் கொடுத்ததோடு அதனைப் பிரிக்கும் வீடியோவையும் ரவீந்தர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement