• Jul 26 2025

Tom and Jerry ஐ விட மோசமாக மோதலில் ஈடுபடும் அபியும் வெற்றியும்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் கதாநாயகனாக வெற்றியும், கதாநாயகியாக அபியும் காணப்படுகின்றனர். 

அந்தவகையில் தற்போது இந்த சீரியலின் கதைப்படி வெற்றி மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அதே நேரத்தில் அவரது மனைவி அபி கலெக்டராக இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு சுடர் என்கிற குழந்தை பிறக்கிறது. சுடர் தற்போது வளர்ந்து பள்ளிக்கு செல்லும் வயதை அடைந்திருக்கின்றார். ஆனால் எதிர்பாராத விதமாக சுடரும் வெற்றியும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.


இது ஒரு புறம் இருக்க அபி வருணைக் காதலித்து திருமணம் செய்து விட்டதாக எண்ணி கண்மணியை வெற்றி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். கண்மணி வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றார் கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் அபியும் வெற்றியும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அபி பற்றிய உண்மை எப்போது வெற்றிக்கு தெரிய வரும் எப்போது இருவரும் சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.இப்படியான நிலையில் இருவரும் சண்டை பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement