• Jul 26 2025

முதலிரவில் நடந்த சம்பவம்.. ஷாக்கான மணப்பெண் – வெளியான குட் நைட் ஸ்னீக் பீக் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முதல் இரவில் மணிகண்டன் குறட்டை விட மணப்பெண் அதிர்ச்சியாகும் குட் நைட் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில்  பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன்.மேலும் இவர் ஜெய் பீம் என்ற படத்தில் மூலம் நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அத்தோடு இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது குட் நைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.மேலும்  அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் என்பவர் நடிக்க விநாயக் சந்திரசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். அத்தோடு ரமேஷ் திலக், பக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

அத்தோடு உலகம் முழுவதும் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குறட்டை விடும் பழக்கம் உள்ள மணிகண்டன் தனது வருங்கால மனைவியுடன் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து திருமணத்தை முடித்துவிட முதல் இரவு அன்று இந்த விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என பயத்துடன் ரூமுக்கு வருகின்றார்.

அத்தோடு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்க ஹீரோயின் சத்தமே பிடிக்காது என கூறி பேசிக் கொண்டிருக்க இறுதியில் ஹீரோ குறட்டை விட்டு தூங்குகிறார்.

இந்த ஸ்னீக் பிக் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement