• Jul 24 2025

இரண்டு முறை அபார்ஷன் ஆச்சு, சுவேதா கிட்ட மன்னிப்புக் கேட்கணும்- பாடகி சுஜாதாவின் மனதை உருக்கும் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாடகி சுஜாதா ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய பாடல் திறமையை உலகத்திற்கு நிரூபிக்க தொடங்கி இருக்கிறார். இதுவரைக்கும் கிட்டத்தட்ட அவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை சுஜாதா பாடி இருக்கிறார். இவருக்கு இவருடைய கணவரோடு 17 வயதிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாம். பிறகு 18 வயது முடிவடைந்ததும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். 

சுஜாதாவின் கணவர் ஒரு மருத்துவர் குழந்தைகள் நல நிபுணராக இருக்கிறார். இவருக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் பாடகி சுவேதா பிறந்திருக்கிறார். சுஜாதாவிற்கு ஸ்வேதா ஒரே மகளாக இருந்து வருகிறார். ஏற்கனவே சுஜாதாவும் அவருடைய அம்மாவிற்கு ஒரே மகள் தான். இந்த நிலையில் குழந்தையாக இருக்கும் போது ஒரு அம்மாவாக என்னால் பல கடமைகளை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது என்று உருக்கமாக கூறியிருக்கிறார். ஸ்வேதா பிறந்த பிறகு தொடர்ச்சியாக அதிகமான பாடல் வாய்ப்புகள் சுஜாதாவிற்கு கிடைத்த வண்ணமாகவே இருந்ததாம்.


அதனால் ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் படிக்கும்போதும் அவர்களுடைய ஸ்கூல் ஃபங்ஷன், காலேஜ் ஃபங்ஷன், ஸ்போர்ட்ஸ் பங்க்ஷன் என எதிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது. அது இப்போது நினைத்தாலும் வருத்தமாக தான் இருக்கிறது. எங்களை அந்த நேரங்களில் அதிகமாக ஸ்வேதா மிஸ் பண்ணுவார். ஆனால் எங்களால் அந்த நேரங்களில் அவளோடு இருக்க முடியவில்லை. அதற்கு இப்போது நான் மன்னிப்பு தான் கேட்க முடியும்.


 வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கும் சுஜாதா அதற்கு எல்லாம் ஈடு செய்யும் வகையில் தற்போது ஸ்வேதாவின் மகளை பராமரித்து வருவது எங்களுடைய வேலையாகத்தான் இருக்கிறது. அதை நாங்கள் சந்தோஷமாக செய்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சுஜாதா தான் அவருடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது என எல்லாவற்றையும் பார்த்து வருகிறாராம் என ஒரு பேட்டியில் பேசி இருக்கின்றார்.


Advertisement

Advertisement