• Jul 25 2025

அடேங்கப்பா....பிகினி உடையில் பாறை மீது ஏறி சாகசம் செய்த அமலாபால்- வெளியான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் தான் நடிகை அமலாபால்.இதனால் இவருக்கு தமிழில் பல படவாய்ப்புக்களட கொடுக்கக் கூடாது என்று கோலிவுட்டில் பெரிய பஞ்சாயத்தே அரங்கேறியது.

தொடர்ந்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட  அமலா பால் சமீப காலமாக பாலி தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.விஷ்ணு கோயில் குளம் ஒன்றில் அமலா பால் குளித்தபடியே பிரார்த்தனை செய்த போட்டோக்களை மகா சிவராத்திரி அன்று வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.


இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். பாலி தீவில் ஒரு பாறை மீது கட கடவென குரங்கு போல ஏறி உச்சியில் இருந்து அருவியில் இருந்து ஓடும் நீரோடையில் குதித்து நீந்தும் வீடியோவை வெளியிட்டு தனது சாகசத்தை காட்டி உள்ளார் .


அங்கேயே மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் கொஞ்சம் கூட பயமில்லாமல் பிகினி உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக அமலா பால் விளையாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். என்னம்மா வாழுறாரு அமலா பால் என்றும் நாங்களும் கூட வரலாமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement