• Jul 25 2025

பற்றி எரியும் விஜய் VS அஜித் சண்டை... நான் சொன்னதே வேறு.. சமாளிக்கும் தில் ராஜு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே தமிழ் நாட்டைத் தாண்டி உலகம் பூராகவும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும் அதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடுவது வழமை. 


இந்நிலையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துணிவு' படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது. என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்யை போட்டி நடிகர்களாகவே பாவித்து வருகின்றனர். 

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜில்லா' மற்றும் 'வீரம்' படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு தங்கள் படத்திற்கு சமமான திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்பது போல பேசியுள்ளார்.


மேலும் இதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த உதயநிதியை சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறாக தில் ராஜு விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஸ்டார், எனவே அவர் படங்களுக்கு அதிக திரையரங்கங்கள் கிடைக்கவேண்டும் என சொன்னது அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளது.


அதுமட்டுமல்லாது அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சமபலத்துடன் இருக்கையில் தில் ராஜு எப்படி விஜய் தான் நம்பர் ஒன் என சொல்லலாம் என்று அஜித் ரசிகர்கள் தில் ராஜூவை விமர்சித்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். 

இதனைத் தொடர்ந்து தில் ராஜு நேற்றைய தினம் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது தொடர்பான ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார். அதில் "நான் 45 நிமிடத்திற்கு ஒரு பேட்டி கொடுத்தேன், அதில் இருந்த 30 செக்ண்ட் வீடியோ மட்டுமே வெளியாகி இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, நான் கூறியதே வேறு" எனத் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement