• Jul 24 2025

மீண்டும் மீண்டும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிரும் ஹன்ஷிகா... குவியும் லைக்குகள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா சமீபத்தில் தான் திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றார். அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.


இதற்கு முன்னதாக இவருடைய திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து வந்தன. மேலும் ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இது குறித்த புகைப்படங்கள் இப்போதுவரை சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் திருமணத்தைத் தொடர்ந்து இவர் தற்போது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement