• Jul 26 2025

திடீரென பேச்சு மூச்சின்றி கிடக்கும் பேச்சி- பறதிப் போய் கதறும் குடும்பத்தினர்- வெளியாகிய பரபரப்பான முத்தழகு ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிரப்பாகும் சீரியலுக்கென்று ரசிகர்களிடையே தனி மவுஸ் காணப்படுகின்றது.அந்த வகையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் தான் முத்தழகு.

இரண்டு திருமணம் செய்த ஒரு ஆணின் நிலமையையும் கணவரின் குடும்பத்தின் கௌரவத்தை காக்க வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கும் பெண்ணின் வாழ்க்கையையும் இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் பேச்சி தன்னுடைய ஊரில் ஒரு பிள்ளைக்கு ஆப்பிரேஷன் செய்வதற்காக பத்து லட்சம் ரூபா பணத்தைக் கொண்டு வந்து வைக்கின்றார்.அந்த பணத்தை எடுத்து கொடுக்கும் போது பேச்சியின் மருமகன் வந்து தனக்கு பண் தேவை என்று பேச்சியைத் தள்ளி விட்டு பணப்பெட்டியை பறித்துக் கொண்டு போகின்றார்.

இந்த அவமானம் தாங்க முடியாமல் துாங்கப் போன பேச்சி அப்படியே பேச்சு மூச்சின்றி கிடக்கின்றார். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பதறிப் போய் பேச்சியைத் துாக்கிக் கொண்டு ஓடுகின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement