• Jul 25 2025

மாமன்னன் படத்தை பார்க்கிறவங்க எல்லாருமே மாறிடுவாங்க- பாராட்டிய மாரி செல்வராஜின் சகோதரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசான திரைப்படம் தான் மாமன்னன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாவது படமாக மாமன்னன் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற படம் தவறவில்லை.

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள உதயநிதியின் கடைசி படம் என்ற அடையாளத்துடன் மாமன்னன் படம் வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்களும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற புதிய முயற்சிகளில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் அவர், இந்தப் படத்திலும் அதை நிரூபித்துள்ளார். 


குறிப்பாக வடிவேலுவின் திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல ஃபகத் பாசில் இந்தப் படத்திலும் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. உதயநிதி மற்றும் கீர்த்தியின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றுள்ளன. 

இந்நிலையில் இந்தப் படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்த மாரி செல்வராஜின் சகோதரர், தான் எப்போதும் மாரியின் படத்தை ரசிகர்களுடன் முதல் நாள் முதல் ஷோவில் சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போதும் படத்தை பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார். உலக ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக மாமன்னன் அமையும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். 


படத்தை அனைத்து ரசிகர்கள் வரவேற்று கொண்டாடுவார்கள் என்றும் தனக்கும் இந்தப் படம் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு சந்தோஷப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைப்போலவே பல ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருவதையும் பார்க்க முடிந்தது.

Advertisement

Advertisement