• Jul 26 2025

முத்தக் காட்சியில் நடித்து.. வாயை டெட்டால் கொண்டு கழுவினேன் - மனம் திறந்த பிரபல நடிகை..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் 1982ஆம் ஆண்டு வெளியான சாத் சாத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீனா குப்தா. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் அறிமுகமான அதே வருடத்தில் மொத்தம் ஆறு படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். தொடர்ந்து உத்சவ், லைலா, தானியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். `

இந்நிலையில் நடிகை நீனா குப்தா முதன்முதலாக லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர், "திலீப் தவானுடன் பல வருடங்களுக்கு முன்பு சீரியல் ஒன்றில் நடித்தேன். அதுதான் இந்திய தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு லிப் லாக் இருந்தது. அதை நினைத்து என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

திலீப் என்னுடைய நண்பர் இல்லை. அதேசமயம் தெரிந்தவர்தான். அழகாகவும் இருப்பார்தான். ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது பிரச்னை. அதற்கு நான் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தயாராக இல்லை. ரொம்பவே பதற்றமாக இருந்தேன். இருப்பினும் நான் ஒரு நடிகை என்பதால் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன்.

கேமராவின் முன்பு சிலரால் நகைச்சுவை செய்ய முடியாது. அழ முடியாது. அதையெல்லாம் எனது தலையில் ஏற்றிக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன். எனக்கு அதிகம் தெரியாத ஒருவரை முத்தமிடுவது ரொம்பவே கடினமாக இருந்தது. அந்தக் காட்சியில் நடித்து முடித்த பிறகு டெட்டாலை கொண்டு எனது வாயை சுத்தம் செய்தேன்" என்றார்.

Advertisement

Advertisement