• Jul 26 2025

கண்ணீர் வடிக்கப் போகும் கரிகாலன்... நந்தினி கூறியதைக் கேட்டு ஷாக்கான குணசேகரன்... வெளியானது ஸ்பெஷல் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் "ஒரு முக்கிய அறிவிப்பு, ஏம்மா ஏய், சைவம், அசைவம் இரண்டிலும் எத்தனை வகை இருக்கோ, அத்தனையும் அமர்க்களமாக சமைச்சு வையுங்க" என்கிறார். அதற்கு நந்தினி "நம்ம வீட்டிற்கு யாராவது விஐபி வாறாங்களா" எனக் கேட்கின்றார்.


பதிலுக்கு குணசேகரன் "கரிகாலன் மாப்பிள்ளை விருந்துக்கு வாறான், இவ்வளவு நாளாக அவன் யாரோ கரிகாலன், இப்போ ஆதி குணசேகரன் வீட்டு மருமகன் குணசேகரன், விஐபி யை விட மேல" என்கிறார். அதற்கு நந்தினி அசத்திடலாம் மாமா என்கிறார். அத்தோடு ஈஸ்வரி தான் சைவம் பார்த்துக்கிறேன் எனவும், ரேணுகா தான் அசைவைத்தைப் பார்த்துப்பதாகவும் கூறுகின்றார். 


மேலும் நந்தினி "நான் ஓவராயெல்லாம் பார்த்துக்கிறேன், சாப்பிட்டு கரிகாலன் கண்ணீர் வடிக்கப் போகிறான்" என்கிறார். அதைக்கேட்டதும் குணசேகரன் ஷாக் அடைகின்றார். பின்னர் நந்தினி ஆனந்தக் கண்ணீர் மாமா எனக் கூறி சமாளிக்கின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

Advertisement

Advertisement