• Jul 24 2025

சாலையில் முட்டி போட்டு நண்பனின் பைஃக்கை திருத்திய நடிகர் அஜித்- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பெஸ்ட்லுக் போஸ்டரும் அண்மையில் தான் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்திற்காக விசாகப்பட்டினத்தில் ஷுட்டிங் நடந்து முடிந்ததை அடுத்து தனது  BMW  பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்

இது தவிர இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதிகளிலும் தனது  நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது


இந்நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் ரைடு சென்ற போது அஜித்குமாரின் நண்பரும் பொள்ளாச்சி நகர கவுன்சிலருமான வசந்தின் டுகாட்டி பைக்கை பஞ்சர் பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது. கொட்டும் மழையில் சாலையில் முட்டி போட்டு அமர்ந்து பஞ்சர் ஒட்டும் அஜித்தின் செயலை ரசிகர்கள் பாராட்டி இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement