• Jul 24 2025

வாழ்த்து மழையில் நனையும் தமன்னா... அடடே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியிலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசஸியாக நடித்து அசத்தி வருகிறார்.


குறிப்பாக தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா, தனுஷ், விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது சோலோ நாயகியாகவே அதிகளவான படங்களில் நடித்து வருகிறார்.


அதிகளவான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட நாயகிகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருகின்றார். 

திரையுலகில் மட்டுமல்லாது சமூக வலைதளப் பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்குவது வழமை.


அந்தவகையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக பாவாடை, தாவணி அணிந்து கலக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார்.

இதற்கு காரணம் தற்போது இவர் விருது ஒன்றினை வென்றிருப்பது தான். அதாவது 'லொக்மாட் ஸ்டைலிஸ் அவார்ட்-2022' என்ற விருதினை வென்றெடுத்து இருக்கின்றார். அவ் விருது வழங்கும் விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடையானது ரொம்பவே அழகாக இருக்கின்றது. 


இவரிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற அதே நேரத்தில் அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகின்றன.

Advertisement

Advertisement