• Jul 26 2025

துணிவு பட வெற்றியைக் கொண்டாட மறுத்த நடிகர் அஜித்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித்தின் 61-வது படம் துணிவு. ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மோகனசுந்தரம், ஜான் கொகேன், அமீர், பாவனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.


வங்கியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி வெளிப்படையாக பேசி இருந்த இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது. விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமாக அஜித் படத்துக்கு வெளிநாட்டில் குறைந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை இப்படம் தகர்த்தெறிந்துள்ளது. வெளிநாடுகளில் துணிவு படம் மாபெரும் வெற்றியை ருசித்து சாதனை படைத்துள்ளது.


இப்படி வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை துணிவு படம் படைத்து வந்தாலும், இப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாத மனநிலையில் நடிகர் அஜித் உள்ளாராம். ஏனெனில் இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இந்த மரணம் அஜித்தை மிகவும் பாதித்துள்ளதாம்.


இதனை துணிவு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார். இதன் காரணமாக தான் அவர் துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர், மது அருந்திவிட்டு தியேட்டருக்கு வந்ததால் துணிவு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட விரக்தியில், தூத்துக்குடியில் அஜித் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement