• Jul 24 2025

உடனடியாக தகனம் செய்யப்பட்ட நடிகர் அஜித்தின் தந்தையின் உடல்- நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவரது தந்தையான  பி சுப்ரமணியம் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என தகவல் வெளியாகியிருந்தது.

இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர். தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 


அஜித்தின் தந்தை பி சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவரது உடலுக்கு சில திரையுலகப் பிரபலங்கள் மாத்திரம் நேரில் சென்று அஞ்சலி வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எந்தெந்த பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விபரம் வெளியாகவில்லை. மேலும் அவர் நீண்ட நாட்களாகவே உடல் நோயால் பாதிக்கப்பட்டதால் இன்றே தகனம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகிள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement