• Jul 25 2025

4ஆண்டுகளாக அஜித் தந்தைக்கு என்ன ஆச்சு..? திடீர் மரணத்திற்கு காரணம் இதுதானா..? மகன் மூலம் வெளியான தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் தந்தையான பி சுப்ரமணியம் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் உட்பட அஜித் குமாரின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தந்தையின் திடீர் மறைவு குறித்து அஜித்தும், அவரது சகோதரர்களும் இணைந்து அறிக்கை ஒன்றிணைத்து தற்போது வெளியிட்டுள்ளனர். அதாவது "எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை சிறப்பாக இதுவரை காலமும் வாழ்ந்து வந்தார். 


நாம் கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நாம் நம்புகிறோம்" எனக் குறிப்பிடடுள்ளனர்.

அதுமட்டுமல்லாது எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க. கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” எனவும் மனதை உருக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதிவானது தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு அஜித்திற்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement