• Jul 25 2025

சகுந்தலம் படத்திற்காக தனது டப்பிங் பணிகளை செய்து முடித்த நடிகர் அல்லு அர்ஜுனின் மகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய புஷ்பா திரைப்படம் வேற லெவலில் வெற்றி பெற்றது.இதனால் புஷ்பா 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படத்தில் ஊ சொல்லுறியா மாமா என்னும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியவர் தான் நடிகை சமந்தா.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவரது நடிப்பில் சகுந்தலம் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.


இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தில்  மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'சகுந்தலம்' படத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement