• Jul 25 2025

விக்ரமன் ஆர்டர் செய்த உணவினைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராபர்ட் மாஸ்டர்- அதுவும் முழுசா வேணுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வருகை தந்துள்ளனர்.இது ஒரு புறம் இருக்க 13 லட்சத்துடன் இறுதியாக அமுதவாணன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


இதனை அடுத்து தற்பொழுது ஷிவின் அசீம் விக்ரமன் மைனா நந்தினி ஆகியோரே போட்டியாளர்களாக உள்ளனர்.இது ஒரு புறம் இருக்க முன்னதாக பைனலிஸ்ட் போட்டியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை கேட்டுப் பெறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதற்கென வீட்டினுள் காது போன்ற அமைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சென்று போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை பட்டியலிடலாம்.


அப்போது விக்ரமன் தனக்கு பீஃப் பிரியாணி, பீஃப் ஃப்ரை, பிரெட் அல்வா, ரைத்தா, கத்தரிக்கா கொத்து ஆகியவை வேண்டும் என கேட்டிருந்தார். இதனிடையே இந்த உணவுகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக விக்ரமன் சக போட்டியாளர்களுடம் பேசும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியது.


இந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் விக்ரமன் அமர்ந்திருக்கிறார். அப்போது, உணவுகள் ஆர்டர் பெறுவதுபோல ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறார். விக்ரமனிடம் நடந்து வரும் மாஸ்டர், "உங்க ஆர்டர் என்ன?" என கேட்கிறார். அப்போது விக்ரமன்"பீஃப் பிரியாணி" என்கிறார். அதனை கேட்டதும், "என்னது பீஃப் பிரியாணியா?" என கேட்கிறார் ராபர்ட். விக்ரமன் ஆமாம் என்று சொன்னதும் "பாதி பிளேட் கொடுக்கப்பட்டுமா? அல்லது ஒரு பிளேட்டா?" என கேட்க, தனக்கு முழு பிளேட் வேண்டும் என்கிறார் விக்ரமன்.தொடர்ந்து, தனக்கு இறால் வேண்டும் எனவும் விக்ரமன் கேட்கிறார். ராபர்ட் "சரி, ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்" என்றபடி அங்கிருந்து செல்கிறார். அதனைக்கண்டு விக்ரமன் புன்னகைக்கிறார்.


Advertisement

Advertisement