• Jul 24 2025

நடிகர் தனுஷுக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு...உண்மையை உளறிய ரோபோ சங்கர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்ற ரோபோ சங்கர், டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். அதிலும் மாரி படத்தில் தனுஷ் உடன் முழுக்க பயணித்தார். அந்த படத்தின் மூலம் தான் தனுஷுக்கும் ரோபோ ஷங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அந்த சமயத்தில் தனுஷை குறித்த விஷயங்கள் ரோபோ ஷங்கருக்கு தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ரோபோ சங்கர், ராமாபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் நடத்திய போதை பழக்கத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தான் பட்ட துயரத்தை எடுத்துக் கூறி, இனி யாரும் மது அருந்த வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொண்டார்.



அதன் தொடர்ச்சியாக தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த போது அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட தனுஷ் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து விட்டார். எனக்கு இருந்த அதே கெட்ட பழக்கம் தான் தனுஷுக்கும் இருந்தது என்று அவர் அளித்த பேட்டி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத விட்டுட்டு தனுஷுக்கும் அந்த கெட்ட பழக்கம் இருந்தது என சொல்லி வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார். இது மட்டுமல்ல ஆதி, ஹன்சிகா நடிப்பில் வெளியான பாட்னர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் ஹன்சிகாவின் முழங்காலை தடவ விடல என சபை நாகரிகம் இல்லாமல் மேடையில் ரோபோ சங்கர் பேசியதும் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

Advertisement

Advertisement