• Jul 23 2025

கோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜய்யின் தந்தையின் பிறந்தநாள்... வைரல் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு ஒரு முக்கியமான இயக்குநராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தவகையில் இவர் சட்டம் சம்பந்தமாகவும், அதில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டும் திரைப்படங்களுக்கும் பெயர் போனவராக இருக்கின்றார். 


இவ்வாறு பல திரைப்படங்களை தமிழ்த் திரையுலகிற்குத் தந்த நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சி ஒரு இயக்குநராக மட்டுமின்றில் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது தற்போது சீரியல்களிலும் நடித்து வருகின்றார். அந்தவகையில் எஸ்.ஏ.சி ராடான் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இந்த சீரியலின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு அங்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதுகுறித்த இந்த வீடியோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement