• Jul 25 2025

திருமணத்திற்கு பின்னரும் பல பெண்களுடன் ரகசிய உறவில் நடிகர் ஜீதேந்திரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ஜீதேந்திரா. இவர் குறிப்பாக 70 மற்றும் 80 களில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். சினிமாவில் ஒரு ஹீரோவாக விளங்கினாலும் இவரின் நிஜ வாழ்க்கை பல்வேறு சர்ச்சைகள் நிறைந்ததாக விளங்கி இருந்தது.

அதாவது தனது நண்பரின் காதலியை திருமணம் செய்ய விரும்பி இருக்கின்றார். அத்தோடு முன்னணி நடிகைகள் பலருடன் ரகசிய உறவும் வைத்துக் கொண்டுள்ளார். அந்தவகையில் விமானப் பணிப்பெண்ணான ஷோபா சிப்பியை முதன்முதலில் 14 வயதில் சந்தித்தார் நடிகர் ஜீதேந்திரா. 


இவர்கள் இருவரதும் நட்பு போகப்போக காதலாக மாறியதைத் தொடர்ந்து 1974-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் நடித்து வந்த ஜீதேந்திரா பல நடிகைகளுடன் தொடர்ந்தும் காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

அதாவது 'ஏக் பெச்சாரா' என்ற படத்தில் நடித்த போது நடிகை ரேகாவுடன் நெருங்கி பழகினார் ஜீதேந்திரா. இவ்வாறு நெருங்கிப் பழகினாலும் ஷோபா உடனான உறவை முறிக்க நடிகர் ஜீதேந்திரா மறுத்ததால், அவருக்கும் ரேகாவுக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டு பிரிந்து கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து நடிகை ஹேமமாலினி உடன் நெருக்கமாக பழகி வந்த ஜீதேந்திரா அவரை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அந்தவகையில் நடிகை ஹேமமாலினி தன்னுடைய சுயசரிதையில் தன்னுடைய பெற்றோர் தான் ஜீதேந்திராவை தனக்கு திருமணம் செய்துவைக்க விரும்பியதாகவும், ஆனால் தாங்கள் இருவரும் காதலிக்கவில்லை எனவும் எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


ஷோபா, ரேகா ஆகியோருடன் மட்டுமல்லாது திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீதேவி மற்றும் ஜெயபிரதா ஆகிய நடிகைகள் உடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இவ்வாறாக ஜிதேந்திரா பல நடிகைகளுடன் காதல் உறவு குறித்த சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்றார்.

Advertisement

Advertisement